26 அக்., 2010

மனித உரிமை மீறல்:கஷ்மீரில் 104 ராணுவத்தினரை தண்டித்துள்ளதாக ராணுவ தளபதி அறிக்கை

புதுடெல்லி,அக்.26:ஜம்முகஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக 34 அதிகாரிகள் உட்பட 104 ராணுவத்தினரை தண்டித்துள்ளதாக இந்திய தரைப்படைத் தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இத்தகைய வழக்குகளில் ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் வி.கே.சிங்.

மனித உரிமைக் குறித்த குற்றச்சாட்டுகளில் 95 சதவீதமும் தவறு என்று நிரூபிக்கப்பட்டதாக வி.கே.சிங் தெரிவிக்கிறார். இக்குற்றச்சாட்டுகள் ஆயுதப் படையினரை தரக்குறைவாக சித்தரிக்கும் நோக்கமாகும். ராணுவத்தை தவறான செயல்கள் புரிய அனுமதிப்பதில்லை. சட்டமீறல்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்முக பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் வி.கே.சிங்.

1994 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தினருக்கு எதிராக 988 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன. அதில் 965 வழக்குகளை விசாரித்ததில் 940 வழக்குகளும் தவறு என நிரூபிக்கப்பட்டன. இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாளா நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மனித உரிமை மீறல்:கஷ்மீரில் 104 ராணுவத்தினரை தண்டித்துள்ளதாக ராணுவ தளபதி அறிக்கை"

கருத்துரையிடுக