26 அக்., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பில் இந்திரேஷ்குமார் சிக்குவதற்கு காரணம் புரோகித் அளித்த விபரங்கள்

புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரின் பங்கு வெளியானதற்கு காரணம் மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளியான ஸ்ரீகாந்த் புரோகித் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸுக்கு அளித்த விபரங்கள்தான் என தெரியவந்துள்ளது.

மலேகான் வழக்கில் கர்காரேயின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஜெய்பூர் போலீஸ் புரோகித்தை விசாரித்தது. இவ்விசாரணையின் போதுதான் புரோகித் இந்திரேஷின் பங்குக் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக ஆர்.எஸ்.எஸ் ஸிற்குள்ளாகவே 'ஜெய் வந்தே மாதரம்' என்ற அமைப்பை பிரக்யாசிங் தாக்கூரும், சுனில் ஜோஷியும் இணைந்து உருவாக்கியுள்ளனர். புரோகிதின் அபினவ் பாரத்தை இதில் இணைப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கிடையே நிலவி வந்த பிணக்கம் புலனாய்வுக்கு உதவியதாக புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலேகான் வழக்கில் பிரக்யாசிங் தாக்கூரை கைதுச் செய்யத் தேவையான ரகசிய விபரங்களை மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸிற்கு அளித்தது இந்திரேஷ்குமார்தான் என்பதை ஸ்ரீகாந்த் புரோகித் நம்பவோ அல்லது புலனாய்வு அதிகாரிகள் புரோகித்தை நம்பவைக்கவோ செய்துள்ளனர்.இதன் காரணமாக புரோகித் இந்திரேஷின் தொடர்பை வெளிப்படுத்துகிறார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பை சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா ஆகியோர் நேரடியாக நிகழ்த்தியது என அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இன்னொரு குற்றவாளியும் அஜ்மீரைச் சார்ந்தவருமான தேவேந்திர குப்தா மத்திய பிரதேச மாநிலம் மாவு என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் ஜில்லா பிரச்சாரக்காக பணியாற்றும் காலத்தில்தான் சுனில் ஜோஷியுடன் அறிமுகமாகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் ஆர்.எஸ்.எஸ் ஜில்லா பிரச்சாரக்காக பணியாற்றிய டாங்கே, இவருடன் செயல்பட்டுவந்த சந்திரசேகர் லேவே ஆகியோரும் ரகசிய ஆலோசனை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

மிஹாஜாமில் ஜாம்தாரா ஆர்.எஸ்.எஸ் அலுவலகமாக செயல்பட்டு வந்த மகேஷ்வரி சதனைத்தான் இவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தும் மையமாக பயன்படுத்தி வந்தனர். தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை ஏற்பாடுச் செய்வதற்கான பொறுப்பு லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேபால்பூரில் கிருஷ்ணதத் பாண்டே என்பவரின் கோ சாலையில் சில பொருட்களை ஏற்பாடுச் செய்தனர்.இவற்றை மலேகான் வழக்கில் குற்றவாளியான ராம்ஜி கல்சங்கராவின் இந்தூர் சாந்தி விஹார் என்ற இடத்திலுள்ள வீட்டில் பாதுகாக்கப்பட்டது. இந்த வீட்டில் வைத்துத்தான் தொடர்ச்சியாக ரகசிய ஆலோசனைகள் நடைப்பெற்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பில் இந்திரேஷ்குமார் சிக்குவதற்கு காரணம் புரோகித் அளித்த விபரங்கள்"

கருத்துரையிடுக