கந்தமால்,அக்.30:ஒரிசா மாநிலம் கந்தமாலில் நிகழ்ந்த கலவர வழக்கில் 12 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது;46பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தின் போது நிகழ்ந்த கொலைகள், வீடுகள், தேவலாயங்கள் எரிப்பு தொடர்பான வழக்கில் கந்தமால் விரைவு நீதிமன்றங்கள் 1,2 ஆகியவை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளன.
கடந்த 2008 ஆகஸ்ட் 23-ல் ஒரிசாவில் விஎச்பி தலைவர் சுவாமி லட்சுமணானந்தா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கந்தமாலில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் சுமார் 38 பேர் கொல்லப்பட்டனர். 4,800-க்கும் மேற்பட்ட வீடுகள், தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 12 பேர் மீதான குற்றச்சாட்டை விரைவு நீதிமன்றங்கள் சனிக்கிழமை உறுதி செய்தன. இதில் 7 பேருக்கு 5 ஆண்டுகளும், 3 பேருக்கு 3 ஆண்டுகளும், 2 பேருக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 46 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: on "கந்தமால் கலவரம்:12 பேருக்கு சிறை; 46 பேர் விடுவிப்பு"
கருத்துரையிடுக