24 அக்., 2010

ஹைதியின் மற்றொரு துயரம் காலரா: 138 பேர் மரணம்

போர்ட்-ஆஃப்-ப்ரின்ஸ்,அக்.24:பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைதியில் பரவிவரும் தொற்று நோயான காலராவினால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளனர்.

1500க்கும் மேற்பட்ட மக்கள் காலராவுக்கு சிகிட்சைப்பெற மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதாக ஐ.நாவின் மனித உரிமை பிரிவு
அறிவித்துள்ளது.

இதுவரை காலராவால் 138 பேர் மரணித்துள்ளனர். இது இரண்டு தினங்களில் நடந்ததாகும். ஹைதியின் சுகாதாரத்துறை அமைச்சகமும் காலரா பரவியுள்ளதை உறுதிச் செய்துள்ளது.

காலரா பாதித்த 1400க்கும் மேற்பட்ட நபர்களை சென்ட் மார்கில் நிக்கோலஸ் மருத்துவமனையின் கார் பார்க்கிங் இடத்தில் படுக்க வைத்துள்ளனர். சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்துக் கொண்டிருக்கின்றனர்.

வறுமையாலும், வேலையின்மையினாலும் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு குடிநீர் கூட எட்டாக்கனியாக மாறியுள்ள பரிதாபகரமான சூழலாகும். காலரா பரவியதுடன் தங்களது உயிரையாவது காப்பாற்றுவதற்கு படாதபாடு படுகின்றனர் ஹைதி மக்கள்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹைதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இரண்டரை லட்சம் பேர் மரணமடைந்து 1 கோடியே இருபது லட்சம் பேர் வீடுகளையும் இழந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைதியின் மற்றொரு துயரம் காலரா: 138 பேர் மரணம்"

கருத்துரையிடுக