புதுடெல்லி,அக்.3:தலைநகர் டெல்லியில் 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்குகிறது. இந்தப் போட்டி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை முன்னிட்டு தில்லி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சில சர்ச்சைகளுக்கு மத்தியில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்கப்பட்டதால் ஒருவழியாக திட்டமிட்டபடி காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இப்போட்டிக்கான மொத்த செலவு 70 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.
முதல் நாளில் எந்த விளையாட்டுப் போட்டியும் நடைபெறாது. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள், போட்டிக்கென பிரத்யேகமாகவும் பிரமாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸும் போட்டியை முறைப்படி துவக்கி வைக்கின்றனர்.
துவக்க விழாவில், போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் வீரர்களும் தங்களது தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்து வரவுள்ளனர். இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா தேசிய கொடியை ஏந்தி வரவுள்ளார்.
மேலும் தொடக்க விழாவில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள 'ஏ யாரோ இந்தியா புலா லியா' என்ற காமன்வெல்த் போட்டியின் மைய நோக்கு பாடல் வீடியோவில் பிரமாண்டமான முறையில் திரையிடப்பட உள்ளது. ஏ.ஆர், ரஹ்மான் சொந்த குரலில் சில பாடல்களையும் நிகழ்ச்சியில் பாடவுள்ளார். துவக்க விழாவில் சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
இந்த காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறையாக டென்னிஸ் இதில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த 71 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இதில் சுமார் 6700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற போட்டியில் 4049 வீரர்கள் கலந்துகொண்டனர். இம்முறை பெரும் சர்ச்சைகளுக்கு இடையே நடைபெறும் இப்போட்டியில் கடந்த முறையை விட அதிக வீரர்கள் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சார்பில் 379 வீரர்கள், 240 வீராங்கனைகள் என மொத்தம் 619 பேர் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
கடந்த வாரம் டெல்லியில் வெளிநாட்டவர் இருவர் மர்ம நபர்களால் சுடப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம் என பல்வேறு நாடுகளும் எச்சரித்தன. உளவுத்துறையும் எச்சரிக்கை செய்தது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஒருசில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகினர்.
இந்நிலையில் டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிரடிப் படை வீரர்கள், கமாண்டோ படையினர் உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 1600 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

1 கருத்துகள்: on "டெல்லியில் 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று கோலாகல தொடக்கம்"
தங்கள் பகிர்விற்கு நன்றி.
by
TS
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2010 - துவக்க விழா படங்கள்
கருத்துரையிடுக