2 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:இந்திய மதசார்பின்மையின் மீது விழுந்த அடி என பிரபல வரலாற்றாய்வாளர்கள் அறிக்கை

புதுடெல்லி,அக்.2:அயோத்தியா வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தேசத்தின் மதச்சார்பின்மைக்கும், நீதித்துறையின் கட்டமைப்பின் மீதும் விழுந்த அடி என பிரபல அறிவுஜீவிகளும், வரலாற்றாய்வாளர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ரொமீலா தாப்பர், டாக்டர்.கெ.என்.பணிக்கர், கெ.எம்.ஸ்ரீமாலி, டி.என்.ஜா, அமியகுமார் பக்லி, இஃதிதர் ஆலம்கான், ஸ்ரீராம் மூஸ்வி, ஜெயாமேனன், இர்ஃபான் ஹபீப், சுவீரா ஜெய்ஸ்வால், கேசவன்வெளுத்தாட், டி.மண்டல், ராமகிருஷ்ண சாட்டர்ஜி, அனிருத்ரே, பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், உல்பத் நாயக், ஜெயந்திகோஷ், மதன் கோபால் சிங், விவான் சுந்தரம், ஆர்.பி.பகுகுணா, ஒ.பி.ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களும், அறிவு ஜீவிகளும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்தான் பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பின் எதிர்விளைவுகளைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தக்கட்டமாக என்ன நிகழ்ந்தாலும், அது விலை மதிப்பற்ற ஒன்றை தேசம் இழந்துவிட்டதாகும் என இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த தீர்ப்பில் வரலாறு, விவேகமான அறிவு, மதசார்பற்றக் கொள்கையின் மதிப்பீடுகள் ஆகியவற்றை பரிசீலித்த முறை தீவிரமான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

இவ்வழக்கின் அடிப்படை, ஒரு இந்துக் கோயில் நிலைப்பெற்றிருந்த இடத்தில் மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதாகும். இரண்டு நீதிபதிகள் மேற்கொண்ட நிலைப்பாடு அகழ்வாராய்ச்சித் துறை நடத்திய அகழ்வாராய்ச்சி முடிவுகளிலிருந்து தெளிவான உண்மைகளுக்கு எதிரானதாகும்.

செங்கல் கட்டிகள் மற்றும், சுண்ணாம்புக்கூடு ஆகியவை அகழ்வாராய்ச்சியின் பொழுது கைப்பற்றப்பட்டதிலிருந்து மஸ்ஜிதிற்கு அடியில் கோயில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. நெடுந்தூண்கள் இருப்பதற்கு கூறும் அகழ்வாராய்ச்சித் துறையின் சர்வே அறிக்கை தூண்கள் கண்டுபிடிக்காத சூழலில் போலியாகும். இவர்களின் ஆவணங்கள் வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் விரிவான ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.

ராமன் பிறந்த இடத்தில்தான் இதுநாள் வரை பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்தது என்ற வாதத்தை நிரூபிக்க ஆதாரங்கள் ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கு நீதிபதிகள் கூறும் ஆதாரம் என்னவெனில், தொன்றுத் தொட்டே இந்த நம்பிக்கை இருந்து வருகிறது என்பதே.

புராணக் கதைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை அங்கீகரிப்பதோடு மட்டுமல்ல, இத்தகையதொரு நம்பிக்கையை சொத்துத் தகராறில் பயன்படுத்துவது தவறாகும்.

சட்டம், சமத்துவம் உள்ளிட்ட அனைத்து கொள்கைகளுக்கும் எதிரானது இத்தீர்ப்பு. அத்துமீறல்களுக்கும், தாக்குதல்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது மற்றொரு துர்பாக்கிய நிலையாகும்.

1949 ஆம் ஆண்டு அத்துமீறி பாப்ரி மஸ்ஜிதிற்குள் சிலை வைக்கப்பட்டதற்கு இத்தீர்ப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. 1992 ஆம் ஆண்டு மஸ்ஜித் இடிக்கப்பட்டதையும் இத்தீர்ப்பு நியாயப்படுத்துகிறது.

மஸ்ஜிதின் முக்கிய பகுதியை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிடுவதன் மூலம் இது நிரூபிக்கப்படுகிறது.

இக்காரணங்களால்தான் இந்த தீர்ப்பு, மதசார்பற்ற கொள்கைகளுக்கும், நீதித்துறையின் கண்ணியத்திற்கும் சற்றும் பொருந்தாததாகும். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:இந்திய மதசார்பின்மையின் மீது விழுந்த அடி என பிரபல வரலாற்றாய்வாளர்கள் அறிக்கை"

கருத்துரையிடுக