இஸ்லாமாபாத்,அக்.2:அதிகரித்துவரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் சி.ஐ.ஏவின் இயக்குநர் லியோன் பானெட்டுடன் நடந்த சந்திப்பில் பாக்.பிரதமர் ஆஸிஃபலி சர்தாரி தமது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
ஆளில்லா விமானத்தாக்குதலும், நேட்டோ படையினரின் எல்லை மீறலும் தங்களின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என சர்தாரி கூறியுள்ளார். அமெரிக்காவின் தலைமையிலான ராணுவம் நடத்தும் விமானத்தாக்குதல்கள் சர்வதேச விதிமுறைகளை வெளிப்படையாக மீறியச் செயல் எனவும் சர்தாரி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
நேட்டோ ராணுவம் பாகிஸ்தானின் விமான எல்லையில் அத்துமீறியது என்ற செய்தியைத் தொடர்ந்து பாகிஸ்தானிற்கு வருகைத் தந்துள்ளார் சி.ஐ.ஏவின் இயக்குநர். பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியும் பானெட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நேட்டோவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்க பாக்., மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்"
கருத்துரையிடுக