26 அக்., 2010

குஜராத் கலவரம்:சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி

டெல்லி,அக்.26:2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஷான் ஜாஃப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.

2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் கலவரம்:சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி"

கருத்துரையிடுக