27 அக்., 2010

இந்தோனேசியாவில் சுனாமி: 113 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோரை காணவில்லை

ஜகார்த்தா,அக்.27:இந்தோனேசியாவில் திங்கள்கிழமை இரவு கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானது. இதில் 113 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலநடுக்கத்தின் வீச்சு 7.7 ரிக்டர் அளவாக இருந்ததால் சுனாமி ஏற்பட்டது. 10 அடி உயரத்தில் உருவான அலைகள், மெந்தாவைய் தீவுக்குள் புகுந்தது. இதில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. சுனாமி ஏற்பட்டதை அறிந்த மக்கள் அவசர அவசரமாக வீடுகளைவிட்டு மேடான பகுதிக்கு சென்றுவிட்டனர். எனினும் சுனாமியில் சிக்கி 113 பேர் உயிரிழந்தனர். 500 பேரைக் காணவில்லை. அவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை.

ஆக்ரோஷமாக எழுந்த அலைகளால் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. கடலோரத்தில் படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்த சில ஆஸ்திரேலியர்களை அலை தூக்கி வீசியது. ஆனால் அவர்கள் நீந்தி உயிர் பிழைத்துவிட்டனர்.

இந்தோனேசியா நிலநடுக்க அபாயமிக்க பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2004-ல் அங்கு 9.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் உருவானது. இதில் 2,30,000 பேர் கொல்லப்பட்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தோனேசியாவில் சுனாமி: 113 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோரை காணவில்லை"

கருத்துரையிடுக