ரேபரேலி,அக்.27:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு எதிர்த் தரப்பு வழக்கறிஞர் ஹரிதத் சர்மா கேட்டுக் கொண்டார். சொந்தக் காரணங்களுக்காக வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி விஷ்ணு பிரசாத் அகர்வால், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இது தவிர,எதிர்த்தரப்பு சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அதில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்காக சிபிஐ வழக்கறிஞர் ஆஜராவது குறித்து நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது குறித்து சாட்சியளித்தார்.

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு:நவம்பர் 18-க்கு ஒத்திவைப்பு"
கருத்துரையிடுக