4 அக்., 2010

அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் ஆஃப்கனில் அப்பாவி மக்கள் 25 பேர் பலி

காபூல்,அக்.4:அமெரிக்கா தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் தெற்கு ஆப்கானில் நடத்திய அக்கிரமத் தாக்குதலில் 25 அப்பாவிகள் பலியாயினர்.

பாகிஸ்தான் எல்லையொட்டிய ஹெல்மந்த் மாகாணத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாலிபான் போராளிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாதலி மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்மத்துல்லாஹ் ஸாதத் கூறுகிறார். ஆனால், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவி மக்களாவர். ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் விமானத் தாக்குதலை நிறுத்தவேண்டும் என ஆப்கான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் போராளிகள் மீதுதான் தாக்குதல் நடத்துகிறோம் என நேட்டோ கூறிவருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில், இந்த வருட முதல் பகுதியில் அப்பாவிகள் மீதான அந்நிய ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதலில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் ஆஃப்கனில் அப்பாவி மக்கள் 25 பேர் பலி"

கருத்துரையிடுக