30 அக்., 2010

அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் ஈரானுடன் தொடர்புடைய 37 நிறுவனங்கள்

வாஷிங்டன்,அக்,30:ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் எனக் குற்றஞ்சாட்டி ஜெர்மனி, சைப்ரஸ், மார்ட்டா ஆகிய நாடுகளைச் சார்ந்த 37 ஷிப்பிங் கம்பெனிகளை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் உட்படுத்தியுள்ளது.

இந்தக் கம்பெனிகளின் போர்வையில் பேரழிவு ஆயுத தயாரிப்பின் வளர்ச்சிக்கும், ராணுவ உபகரணங்களை கடத்துவதற்கும் ஈரானின் தேசிய கப்பல் போக்குவரத்து க்கழகம் பயன்படுத்துவதாக அமெரிக்காவின் ட்ரஷரி டிபார்ட்மெண்ட் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த 37 நிறுவனங்களையும், 5 ஈரானைச் சார்ந்தவர்களையும் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை தடைச் செய்துள்ளது அமெரிக்கா. இவர்களுடன் இதர நாடுகள் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என அமெரிக்கா தூண்டும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் ஈரானுடன் தொடர்புடைய 37 நிறுவனங்கள்"

கருத்துரையிடுக