7 அக்., 2010

வெள்ளப்பெருக்கு:இந்தோனேசியாவில் 86 பேர் மரணம்

ஜகார்த்தா,அக்.7:இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பாபுவாவில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தினால் 86பேர் மரணமடைந்துள்ளனர்.

இடிமின்னல் மற்றும் மண்சரிவின் காரணமாக வோண்டாமா மாவட்டத்தில் 80 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அவ்விடத்திலிருந்து
மாற்று இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒரு ஆறு கரைபுரண்டதால் ஏராளமானோரை காணவில்லை. கடற்படையின் போர்கப்பல் மீட்புப்பணிக்கான கருவிகளுடன் களமிறங்கியுள்ளது. நாட்டின் பல இடங்களிலும் கன மழையும், காற்றும் தொடர்கிறது. ஆனால் குறைந்தது 94 பேராவது இறந்திருக்கலாம் என ரெட்க்ராஸ் தெரிவிக்கிறது.

சாலைகளும்,பாலங்களும் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும், பள்ளிக்கூடங்களும் தகர்ந்துபோயுள்ளன.

ஆசியாவின் பல நாடுகளிலும் மழையினால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வியட்னாமில் 26 பேர் மரணித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சீன தீவான ஹய்னாவில் 64 ஆயிரம் பேர் வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வியட்நாமில் க்வாங் பின் மாகாணத்தில் மழையினால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஹய்னாவில் தொடர்ந்து ஏழு நாட்களாக மழைத் தொடர்கிறது. இங்கு இரண்டுபேரை காணவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெள்ளப்பெருக்கு:இந்தோனேசியாவில் 86 பேர் மரணம்"

கருத்துரையிடுக