2 அக்., 2010

அயோத்தி:நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாயாவதி அரசு - காங்கிரஸ்

லக்னோ,அக்.2:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது உ.பி.மாநில மாயாவதி தலைமையிலான அரசு என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசின் வேலை எனக் கூறிய மாயாவதிக்கு பதிலளித்துள்ளது காங்கிரஸ்.

தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உள்ளது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு இயலவில்லையெனில் அல்லது மாநில முதல்வர் ராஜினாமாச் செய்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடும்.

மாநில அரசுக்கு திறமையில்லாவிட்டாலும் மத்திய அரசு தலையிடும். இதனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரான பர்வேஸ் ஹாஷ்மி தெரிவித்தார்.

மக்களிடம் அமைதியை காக்குமாறு வேண்டுகோள் விடுக்காமல், மத்திய அரசு தான் கோரிய துணை ராணுவப்படையை அனுப்பவில்லை என குற்றஞ்சாட்டுகிறார் மாயாவதி.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மத்திய அரசுக்கு கவலையில்லை எனக் கூறுவது சரியல்ல." இவ்வாறு பர்வேஸ் ஹாஷ்மி தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலத்திற்கு போதுமான படை அனுப்பப்பட்டுள்ளதாக உ.பி.மாநில காங்கிரஸ் தலைவர் ரீதா பகுகுணா தெரிவித்துள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை பேச்சுவார்த்தையின் மூலம் பரிசீலிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் ஆர்வம் தெரிவித்துள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள சூழலில் மூன்று மாதத்திற்குள் பிரச்சனை சமரசம் அடையும் வண்ணம் அதனைக் குறித்து சிந்திப்பவர்கள் செயல்பட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அயோத்தி:நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாயாவதி அரசு - காங்கிரஸ்"

கருத்துரையிடுக