30 அக்., 2010

உணவு தானியங்களை அளிக்கவேண்டியது எலிகளுக்கல்ல -உச்சநீதிமன்றம்

புதுடெல்லி,அக்.30:அதிகமான உணவு தானியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் குடும்பங்களுக்கும், பட்டினியால் வாடுவோருக்கும் அளிக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உணவு தானியங்களை கிடங்குகளில் நாசமாவதையோ, கடலில் வீசுவதோ, எலிகள் சாப்பிடவோ அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகளான தல்வீர் பண்டாரியும், தீபக் வர்மாவும் அடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.

கிடங்குகளில் அதிகமாக கிடக்கும் தானியங்களை மேற்கண்ட முறையில் பாழாக்கக் கூடாது என ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2001 ஆகஸ்ட் 20) உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை இரு நீதிபதிகளும் ஞாபகப்படுத்தினர்.

செயல்படுத்தப்படாத வெறும் திட்டங்களால் பயனில்லை. பட்டினியால் வாடுவோருக்கு உணவுப்பொருளை வழங்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

விவசாயிகளின் விருப்பத்தை பாதுகாக்கவும், உணவுப் பாதுகாப்பு உறுதிச் செய்யவும் போதுமான உணவுதானியங்கள் சேகரிக்கவேண்டியது அவசியமாகும்.

1991 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி உணவுதானியங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு புதிய புள்ளிவிபரத்தை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தெளிவுப்படுத்த அரசுதரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உணவு தானியங்களை அளிக்கவேண்டியது எலிகளுக்கல்ல -உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக