போபால்,அக்.13:மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு விபத்தின் தீவிரத்தை தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையம் NIRRH (National Institute for Research in Reproductive Health) ஆராய உள்ளது. விபத்தின் தீவிரம், வாயுக் கசிவால் ஏற்பட்ட நீண்ட கால பாதிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை இம்மையம் ஆராயும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் ICMR (Indian Council of Medical Research) அங்கமான இம்மையம், மீதைல் ஐசோ சயனைட் வாயுக் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மட்டும் ஆராயாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மண்ணின் தன்மை, நீராதார பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யும்.
போபால் விஷ வாயு வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 7-ம் தேதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை இப்புதிய மையத்தை அமைத்துள்ளது.
இப்போது இம்மையம் மத்தியப் பிரதேச தலைநகரில் அமைந்துள்ள கமலா நேரு மருத்துவமனையில் இயங்கி வருகிறது. விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்குதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மையத்தின் தொடக்க விழாவில் மாநில விஷ வாயு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் பாபுலால் கெளர், போபால் நகர மேயர் கிருஷ்ணா கெளர் ஆகியோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: on "போபால் விஷ வாயுவின் பாதிப்பை ஆராய புதிய குழு"
கருத்துரையிடுக