அரசியல் சட்டத்தை காட்சிப் பொருளாக்கிவிட்டு, சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தின் மூலம் கர்நாடக மாநிலத்தில் நேற்று எடியூரப்பாவின் அரசு நம்பிக்கை வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜனநாயக ரீதியிலான அனைத்து மரியாதைகளையும் காற்றில் பறத்திவிட்டு சட்டசபையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார் சபாநாயகர்.
குரல் வாக்கெடுப்பு மூலம் முதல்வர் அவையில் பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் அறிவித்தார். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுத் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக முற்றிலும் ஒருதலைப்பட்சமான அரசியல் விளையாட்டை அரங்கேற்றியுள்ளார் சபாநாயகர் கெ.ஜி.போபய்யா.
சபாநாயகரின் நடவடிக்கையால் கர்நாடகாவில் ஏற்பட்ட நெருக்கடி புதியதொரு வழியை நோக்கி திசை திருப்பப்பட்டுள்ளது.
ஆட்சிபுரிவதற்கான உரிமையும், பெரும்பான்மை ஆதரவுமின்றியே சிறுபான்மை அந்தஸ்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது தற்போதைய கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க அரசு என்பது வெட்டவெளிச்சம்.
எடியூரப்பாவின் அரசு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்ட சூழலில் ஆட்சியில் நீடிப்பதற்காக, எதிர்ப்புடன் கிளம்பிய 5 சுயேட்சைகள் உள்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை அயோக்கியத்தனமாக பறித்துவிட்டதோடு அவர்களை அவையிலிருந்து வெளியேற்றியுள்ளார் சபாநாயகர்.
அவ்வாறு, 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தின் மொத்த எண்ணிக்கையை 208 ஆக சுருக்கி 105 பேரின் ஆதரவோடு அதிகார நாற்காலியில் எடியூரப்பா அமருவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் சபாநாயகர்.
ஆளுநர் பரத்வாஜ் இதனை ஏற்றுக்கொள்ளாமல் கர்நாடக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை சிபாரிசுச் செய்திருப்பது நியாயமான நடவடிக்கையாகும்.
எடியூரப்பா அரசு இனி ஒரு கணமேனும் ஆட்சியில் தொடர உரிமை கிடையாது என்றும், சபாநாயகரின் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது எனவும் குரல்கள் எழுந்துள்ளன.
கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் சபாநாயகர் 16 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது என ஆளுநர் பரத்வாஜ் ஏற்கனவே சபாநாயகருக்கு உத்தரவிட்டிருந்தார்.
பா.ஜ.கவின் எதிர்ப்பு கோஷ்டியை சரிகட்ட அந்த கோஷ்டியை சார்ந்த எம்.எல்.ஏக்களின் பதவியை எந்தவொரு விசாரணையுமின்றி ரத்துச்செய்ய முயற்சி நடப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்துதான் ஆளுநர் சபாநாயகருக்கு இத்தகையதொரு உத்தரவை பிறப்பிக்க காரணமாகும்.
கட்சி அரசியல் விருப்பு வெறுப்புக்கள்தான் சபாநாயகரின் நடவடிக்கையில் நமக்கு புலப்படுகிறது. மிகவும் சிக்கலான கட்டத்தில்தான் கட்சித்தாவல் சட்டப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவியை பறிக்க அனுமதியுள்ளது.
ஆழமான விசாரணையும், ஆதாரங்களும் அதற்கு மிகவும் முக்கியமாகும். ஆளும் கட்சிகளின் விருப்பத்திற்கொப்ப தலையசைப்பவர்களல்லர் ஆளுநரும், சபாநாயகரும். இத்தகையதொரு சூழலில் கர்நாடகா சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவதுதான் சிறந்தது.
விமர்சகன்

0 கருத்துகள்: on "கர்நாடகா:இனி ஒரே வழி தேர்தல் மட்டுமே"
கருத்துரையிடுக