திருவனந்தபுரம்,அக்.12:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலம் உரிமை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு பலம் பிரயோகிப்பதையும், தாக்குதலையும் நியாயப்படுத்தும் தீர்ப்பு என பிரபல வரலாற்றாய்வாளர் கெ.என்.பணிக்கர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கலைஇலக்கிய முன்னேற்றக்கழகம் சார்பாக, 'அயோத்தியா தீர்ப்பு - மதவெறியின் தெளிவான ஆதிக்கம்' என்ற தலைப்பில் நடைப்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரைநிகழ்த்தும் பொழுது இதனை தெரிவித்துள்ளார் அவர்.
மேலும் அவர் கூறியதாவது: "1949 ஆம் ஆண்டிற்கு முன்பு 77 போர்கள் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கிடையே நடந்தது என்று கூறுவது சரியல்ல. அயோத்தியில் இத்தகையதொரு மோதல் ஏற்பட்டது 1885 ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே. 1949 ஆம் ஆண்டில் மஸ்ஜிதில் சிலைகளை வைத்த பிறகுதான் மோதல்கள் உருவானது.
பலம் பிரயோகிப்பதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் ஹிந்துக்கள் 1989 க்கு பிறகு முயற்சிகளை மேற்கொண்டனர். இதனை நியாயப்படுத்தும் வகையிலான தீர்ப்பைத்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
புகார்களுடன் நீதிமன்றத்தை அணுகியவர்களை சந்தோஷப்படுத்த நீதிமன்றம் முயன்றுள்ளது. ஒரு விவகாரத்தில் சமரசத்தை மேற்கொள்வது நீதிமன்றத்தின் வேலையல்ல. இத்தகையதொரு சூழல் உருவானது அரசின் பலகீனமே காரணமாகும்.
ஆட்சியாளர்கள் வரலாற்றையும், மதவெறியையும் அதிகாரத்தை வலுப்படுத்தும் உபகரணங்களாக மாற்றியுள்ளனர். இதே சூழல் இந்தியாவின் பல அரசு நிறுவனங்களிலு வளர்ந்து வருகிறது." இவ்வாறு அவர் உரையாற்றினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அயோத்தியா தீர்ப்பு பலம் பிரயோகிப்பதை நியாயப்படுத்தும் தீர்ப்பு -வரலாற்றாய்வாளர் கெ.என்.பணிக்கர்"
கருத்துரையிடுக