14 அக்., 2010

நம்பிக்கை வாக்கெடுப்பு:ஆளுநரின் தீர்மானம் அரசியல் சட்டத்திற்கு

பெங்களூர்,அக்.14:கர்நாடகா மாநிலத்தில் ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் பா.ஜ.க அரசுக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கைப் பெறுவதற்கு அளித்துள்ள வாய்ப்பு ஆச்சரியமளிப்பதாகவும், இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது எனவும் எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் சித்தாராமைய்யா தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் கூறியதாவது:"சுதந்திர இந்தியாவில் இது போன்றதொரு சம்பவம் இதுவரை நிகழ்ந்ததில்லை. அரசியல் சட்டத்தின்படி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை அனுமதிக்க முடியாது. ஆளுநர் இந்த அனுமதியை அளிப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

பரத்வாஜிற்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். கடந்த திங்கள்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. சாதாரணமாக, கவர்னரின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தியிருக்க வேண்டும். எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க அரசை ஆதரித்தார்கள் என்பதை சபாநாயகர் கெ.ஜி.போப்பய்யா தெளிவுப்படுத்தவில்லை." இவ்வாறு சித்தாராமைய்யா தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நம்பிக்கை வாக்கெடுப்பு:ஆளுநரின் தீர்மானம் அரசியல் சட்டத்திற்கு"

கருத்துரையிடுக