15 அக்., 2010

ஆப்கான் அரசு-தாலிபான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு

காபூல்,அக்.15:ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபானின் மூத்த தலைவர்கள் தலைநகர் காபூலில் வருவதற்குரிய வசதிகளை அமெரிக்க ராணுவம் ஏற்பாடுச் செய்துள்ளதாக நேட்டோ அதிகாரியை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு துவங்கிய அமெரிக்க தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாட்டு படைகளும் சந்தித்துக் கொண்டிருக்கும் பலத்த அடியைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உதவிச் செய்கிறது அமெரிக்கா.

போரை முடிவுக்கு கொண்டுவந்து ஆப்கானிலிருந்து வாபஸ்பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தன.

தாலிபான் தலைவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னர் ஆப்கான் அதிபர் கர்ஸாய் தெரிவித்திருந்தார். இந்த பேச்சுவார்த்தை வெளிநாட்டில் வைத்து நடத்தப்பட்டதாக அவர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், பேச்சுவார்த்தைக் குறித்த கர்ஸாயின் பேட்டிக்கு தாலிபான் மறுப்பு தெரிவித்துள்ளது. அடிப்படையற்ற விஷயங்களை கர்ஸாயி பரப்புவதாக தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.

இதற்கிடையே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் செயல்பாட்டை மேலும் 12 மாதத்திற்கு நீட்டித்துள்ளது. பெண்களும், குழந்தைகளும் நேட்டோவின் தாக்குதலில் கொல்லப்படுவதுக் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கான் அரசு-தாலிபான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு"

கருத்துரையிடுக