இஸ்லாமாபாத்,அக்.15:பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் எட்டுபேர் பாக்.தாலிபான் போராளிகள் எனவும், மூன்றுபேர் வெளிநாட்டு போராளிகள் எனவும் அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஏவுகணைகள் ஒரு வீடு மற்றும் இரண்டு வாகனங்களை தாக்கியது. வீட்டையும், வாகனங்களையும் குறிவைத்து ஏழு ஏவுகணைகள் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்டன.
வடக்கு வசீரிஸ்தானில் லடாக் பகுதியில் அமைந்துள்ள வீட்டை நோக்கி முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து நிமிடத்திற்கு பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் வீட்டிற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் நொறுங்கி இரண்டுபேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த தாக்குதலில்தான் ஐந்துபேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் முதல் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கா தாக்குதலை பலப்படுத்தி வருகிறது. அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்படுவோர்களில் பெரும்பாலோர் அப்பாவி மக்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலில் 11 பேர் மரணம்"
கருத்துரையிடுக