24 அக்., 2010

ஜம்மு கஷ்மீரிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும்: டெல்லி கருத்தரங்கம்

புதுடெல்லி,அக்.24:ஜம்மு கஷ்மீரிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெற வேண்டுமென கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிடிகல் ப்ரிஸனர்ஸ் என்ற அமைப்பின் சார்பில் டெல்லியில் நடந்த கஷ்மீருக்கு சுதந்திரம் ஒன்றே வழி என்ற கருத்தரங்கில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிதான் ஜம்மு கஷ்மீர் என்பதை அதிகாரப்பூர்வமாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: கஷ்மீரிலும் நாட்டிலும் எல்லா சிறைகளிலும் வாடும் கஷ்மீரின் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும்.

கஷ்மீரில் அடையாளம் தெரியாத கல்லறைகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

சிறப்பு ஆயுதச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

நிரபராதிகளான அப்பாவி மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும்.

கஷ்மீர் அங்குள்ள மக்களுக்கு கொடுமைகள் நிறைந்த சிறைக்கூடமாக
மாறிவிட்டது. சில மாதங்களாக நடந்துவரும் மோதலில் அங்கு 110 பேர் கொல்லப்பட்டது இதற்கு சான்று பகிர்கிறது.

எல்லா தந்திரங்களும் கஷ்மீரிகளின் மீது பிரயோகிக்கப்படுகிறது. ஆனாலும், உயர்வான பொறுமையும், தைரியத்தையும் கஷ்மீர் மக்கள் பேணி வருகின்றனர்.

கஷ்மீரிகளின் சுயநிர்ணய அவகாச உரிமை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் மற்றும் ராணுவ அத்துமீறல்களின் மீது உலகத்தின் கவனம் திரும்பவேண்டிய சூழல்தான் இது.

கஷ்மீர் மக்கள் சுதந்திரத்தை விரும்புகின்றனர் என்பது உறுதியானதாகும். சுதந்திரம் மட்டுமே பிரச்சனைகளுக்கு பரிகாரமான ஒரே வழி.

கடந்த பல ஆண்டுகளாக சமாதான முறையில் கஷ்மீரிகள் போராடி வருகின்றனர். அங்கு அக்கிரமம் புரிவது இந்திய ராணுவம் மட்டுமே. மனித உரிமை மீறல்களும், ஆட்கள் காணாமல் போவதும் தொடர்கிறது. அவசரமாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஏழு லட்சம் ராணுவத்தினர் கஷ்மீரில் உள்ளனர். இந்தியாவின் ஆக்கிரமிப்பை ஊக்கமூட்டும் செயலாகும் இது. இந்த பிரச்சனைகளையெல்லாம் அவசரமாக கவனத்தில் கொள்ளவேண்டும் என டெல்லி கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜம்மு கஷ்மீரிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும்: டெல்லி கருத்தரங்கம்"

கருத்துரையிடுக