24 அக்., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:ஐந்து ஹிந்துத்துவா பயங்கரவாத தலைவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அஜ்மீர்,அக்,24:கடந்த 2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐந்து ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்க தலைவர்கள் மீது தீவிரவாத எதிர்ப்புப்படை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அபினவ் பாரத், ஆர்.எஸ்.எஸ் ஆகிய பயங்கரவாத ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த தலைவர்கள் மீது கொலை, கொலைமுயற்சி, வழிப்பாடுத் தலங்களை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த தேவேந்திர குப்தா, சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்ஸாங்கரா, அபினவ் பாரத் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த லோகேஷ் சர்மா, சந்திரசேகர் லாவெ ஆகியோர்தான் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.

இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி ஏற்கனவே குண்டடிப்பட்டு இறந்து போனார்.

துணை முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் ஜகேந்திரகுமார் முன்பு ஏ.டி.எஸ் 806 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சந்திரசேகர் லாவெ ஆகியோர் தற்பொழுது நீதிமன்ற காவலில் உள்ளனர். சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி கல்ஸாங்கரா ஆகிய பயங்கரவாதிகள் இதுவரை கைதுச் செய்யப்படவில்லை.

மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியான ஹிந்துத்துவா பெண் பயங்கரவாதி பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்டவர்களுடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்த தேவேந்திர குப்தா சில காலம் தலைமறைவாக இருந்தார். பின்னர் நோயாளியான தனது தாயாரை காண வந்தபொழுது கைதுச் செய்யப்பட்டார்.

பயங்கரவாதி சந்திரசேகர் மத்திய பிரதேசில் வைத்து கைதுச் செய்யப்பட்டார். இவ்வழக்கில் விசாரணை 26 ஆம் தேதி நடைபெறும். 133 சாட்சிகளை அரசு தரப்பு ஆஜர்படுத்தும்.

அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:ஐந்து ஹிந்துத்துவா பயங்கரவாத தலைவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்"

கருத்துரையிடுக