8 அக்., 2010

பாகிஸ்தானில் நேட்டோ டாங்கர்கள் மீது மீண்டும் தாக்குதல்

இஸ்லாமாபாத்,அக்.8:ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவத்தினருக்கு எரிபொருளைக் கொண்டு சென்ற 25 டாங்கர் லாரிகள் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தென்மேற்கு நகரமான குவாட்டாவில் நேற்று இரவு நடந்த இத்தாக்குதலில் லாரி டிரைவர் கொல்லப்பட்டார். கடந்த ஆறு தினங்களில் தாங்கள் நடத்தும் நான்காவது தாக்குதல் இது என பாகிஸ்தான் தாலிபான் கூறியுள்ளது.

அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல் வலுவடைந்ததைத் தொடர்ந்து அதற்கொப்ப தங்களுடைய தாக்குதலும் வலுவடையும் என அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் அஸம் தாரிக் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் இரண்டு வாகனங்களில் வந்த 14 பேர்தான் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டாங்கர் லாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக குவாட்டா போலீஸ் தலைவர் ஹமீத் ஷக்கீல் கூறுகிறார்.

டாங்கர் லாரிகள் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் எங்களால் பாதுகாப்பு அளிக்க இயலும், அவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தால் அதன் பாதுகாப்பு பொறுப்பு தனியார் ஏஜன்சிகளுக்குத்தான் என ஷக்கீல் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் நேட்டோ டாங்கர்கள் மீது மீண்டும் தாக்குதல்"

கருத்துரையிடுக