8 அக்., 2010

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை தடுப்போம் - சிவசேனா மிரட்டல்

மும்பை,அக்.8:பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் இரண்டு பாகிஸ்தான் கலைஞர்களை உட்படுத்தியதால் அந்நிகழ்ச்சியை தடுப்போம் என மிரட்டல் விடுத்துள்ளது சிவசேனா.

இந்த ரியாலிட்டி ஷோவுக்கெதிராக சிவசேனாவும், நவநிர்மாண் சேனாவும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதிலும் பாகிஸ்தானிகள் பங்கேற்பதை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் விலக்கவில்லை. ஆதலால் தாங்கள் அந்நிகழ்ச்சியை தொடர அனுமதிக்கமாட்டோம் என சிவசேனா கூறுகிறது.

நேற்று முன்தினம் 150க்கும் மேற்பட்ட சிவசேனா, எம்.என்.எஸ் தொண்டர்கள் தொலைக்காட்சி அலைவரிசையின் அலுவலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவசேனாவின் மிரட்டலைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை தடுப்போம் - சிவசேனா மிரட்டல்"

கருத்துரையிடுக