20 அக்., 2010

சட்டீஷ்கர்:மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றது போலி என்கவுண்டரில்

புதுடெல்லி,அக்.20:சட்டீஷ்கர் மாநிலத்தில் இரண்டு மாவோயிஸ்டுகளை அவர்களுடன் நடந்த மோதலின்போது சுட்டுக் கொன்றதாக கூறும் போலீசின் கூற்று பொய்யென்றும், இம்மோதல் போலி என்கவுண்டர் எனவும் பி.யு.டி.ஆர் என்ற ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தவாரம் மாவோயிஸ்டுகளான நாகேஷ், தாராபாய் ஆகியோர்போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபொழுது சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் அவர்களுடனிருந்த ஒருவர் காட்டில் தப்பிச் சென்றார் எனவும் சட்டீஷ்கர் போலீஸ் கூறுகிறது.

ஆனால், போலீசாரின் இக்கூற்றில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக பி.யு.டி.ஆர் அமைப்பின் செயலாளர்களான அபிஷ்குப்தாவும், மவுஷ்மி பாசுவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ராய்பூரில் ஷிவபூர் கிராமத்தில் என்கவுண்டர் நடந்ததாக போலீஸ்கூறுகிறது. ஆனால், கொல்லப்பட்ட நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட தொழில் நகரமான பிலாய்க்கு அருகிலிலுள்ள ஜமுல் என்ற பகுதி மக்கள் இதிலிருந்து வேறுப்பட நிகழ்வை கூறுகின்றனர்.

15 ஆம் தேதி அதிகாலையில், ஜமுல் ரெயில்வே பாலத்திற்கு அருகேதான் இருவருடைய உடல்களை அவ்வூர் மக்கள் கண்டெடுக்கின்றனர். அப்பொழுது அங்கு போலீசார் எவருமில்லை. ஒரு மணிநேரம் கழிந்த பிறகே போலீஸ் அங்கு வருகிறது. அதுமட்டுமல்ல, துப்பாக்கிச் சத்தத்தை முந்தைய இரவில் அவ்வூர் மக்கள் எவரும் கேட்கவில்லை.

என்கவுண்டர் நடந்ததாக கூறப்படும் சிவபூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிலுள்ள ஜமுலில் இறந்த உடல்களை கண்டெடுத்தது மர்மமாக உள்ளதாக பி.யு.டி.ஆர்
குற்றஞ்சாட்டுகிறது.

சிவபூரின் அருகிலிலுள்ள பூந்தோட்டத்தில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக தகவல் கிடைத்ததாக கூறும் போலீஸ்தான் மாவோயிஸ்டுகள் ஆயுதம் வாங்க வந்ததாகவும் கூறுகிறது.

மூன்றாவது நபர் காட்டில் தப்பி ஓடிவிட்டார் என்றுக் கூறுவதும் தவறாகும் என பி.யு.டி.ஆர் கூறுகிறது. மாநிலத்தில் மக்கள் உரிமை ஆர்வலர்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கை இது என பி.யு.டி.ஆர் குற்றஞ்சாட்டுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சட்டீஷ்கர்:மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றது போலி என்கவுண்டரில்"

கருத்துரையிடுக