புதுடெல்லி,அக்.22:கஷ்மீரில் எல்லாப் பிரிவினரையும் திறந்த மனதுடன் சந்திக்க விரும்புவதாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர்கள் குழு அறிவித்துள்ளது. இக்குழு நாளை ஸ்ரீநகருக்கு செல்கின்றது.
பிரபல பத்திரிகையாளர் திலீப் பட்கோங்கர், பிரபல அறிஞர் ராதாகுமார், முன்னாள் சி.ஐ.சி உறுப்பினர் எம்.எம்.அன்சாரி ஆகியோரைக் கொண்ட நடுவர்கள் கமிட்டியை கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாண மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்பொழுது அவர்கள் கூறியதாவது: தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி கஷ்டமானதாக இருந்தாலும், பல்வேறு அபிப்ராயம் கொண்டவர்களையும் சந்திப்போம். பேச்சுவார்த்தை பரிபூரணமாக இருக்கும். பிரதமர் உயர்மட்ட ஒத்துழைப்பை தருவதாக வாக்களித்துள்ளார். பேச்சுவார்த்தையின் விவரங்களை எந்த நேரத்திலும் பிரதமரிடம் அளிப்போம்.
எல்லா மாதங்களிலும் ஒரு முறை கஷ்மீருக்கு செல்வோம். ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின் பிறகும் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்போம். பரிபூரணமான அரசியல் தீர்வுக் காண்பதற்குரிய முக்கியத்துவத்தை பிரதமர் அழுத்தமாக கூறினார். இவ்வாறு அக்குழுவினர் தெரிவித்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை - நடுவர்கள்"
கருத்துரையிடுக