22 அக்., 2010

கோரிக்கைகளை பரிசீலிக்காமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை -கிலானி

புதுடெல்லி,அக்.22:கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுதல், அரசியல் கைதிகளை விடுதலைச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்காமல் தாங்கள் இனி பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தேவைகளை அங்கீகரிக்காத அரசு நியமிக்கும் எக்குழுவினருடனும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாரில்லை. 150 பேச்சுவார்த்தைகள் இதுவரை நடந்த பிறகும் பலன் கிடைக்கவில்லை.

மத்திய அரசு நியமித்துள்ள 3 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் எனவும், நடுவர் குழுவினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது என கஷ்மீர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கிலானி தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று 'கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி' என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது: சுதந்திரத்திற்காக நெடுங்காலம் போராடிய இந்தியர்களிடம் சுதந்திரம் என்றால் என்ன என்பதுக் குறித்து விளக்கவேண்டிய அவசியம் இல்லை. கஷ்மீரிகளும் தற்பொழுது இதே கோரிக்கையை முன்வைக்கின்றனர். கஷ்மீருக்கு சுதந்திரம் என்றால் கஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் என்றுதான் பொருள்.

வரலாற்றில் ஏராளமான சிரமங்களை தாண்டி வந்தவர்கள் கஷ்மீரிகள். ஆயிரக்கணக்கான கஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் சிறையிலடைக்கப்பட்டனர்.ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. மனிதத் தன்மையற்ற இந்த நடவடிக்கைகளா தேசிய விருப்பம்? என கிலானி கேட்கிறார்.

கஷ்மீரில் எங்குப் பார்த்தாலும் ராணுவ முகாம்கள்தான். ஒரு கஷ்மீரிக்கு அவனுடைய சொந்த மண்ணில் வீட்டிலிருந்து வெளியே இறங்கி நடப்பதற்கு வங்காளத்தைச் சார்ந்த, உ.பியைச் சார்ந்த, பீகாரைச் சார்ந்த ராணுவ வீரர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். பெண்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்க்கொண்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த மோதலில் மட்டும் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் கைதுச் செய்யப்பட்டனர். 3000 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 8080 பேர் சிகிட்சைப் பெற்று வருகின்றனர். 30 தலைவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக இந்திய மக்கள் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு கிலானி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோரிக்கைகளை பரிசீலிக்காமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை -கிலானி"

கருத்துரையிடுக