26 அக்., 2010

ஆபாசத்தை வெளிப்படுத்தும் ஆடைகளுக்கு இத்தாலி நகரில் தடை வருகிறது

ரோம்,அக்,26:உடல் அங்கங்களை வெளிப்படுத்தி ஆபாசத்தை உருவாக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்க இத்தாலியின் கடலோர நகரம் திட்டமிட்டுள்ளது.

பொது சமூகத்தின் கண்ணியத்தை நிலை நிறுத்தவும், சமூக பாதுகாப்பிற்கும் இத்தகைய சட்டங்கள் உதவும் என காஸ்டெல்லாமர் டிஸ்டாபியா நகர மேயர் லூகி போபியோ தெரிவிக்கிறார்.

நகரத்தின் அந்தஸ்தை நிலைநாட்டவும், குடிமக்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு மனோபாவத்தை உருவாக்கவும் இத்தகைய சட்டங்கள் தேவை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

சட்டத்தை மீறுபவர்களுக்கு 35 டாலரிலிருந்து 696 டாலர் வரை அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி நீளம் குறைந்த இறுக்கமான ஜீன்ஸ்கள் அணிய தடை விதிக்கப்படும். கடற்கரையில் குளிப்பது, கால்பந்து விளையாடுவது ஆகியவற்றையும் தடைச் செய்ய திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை வருகிற திங்கள்கிழமை கூடும் மாவட்ட கமிட்டி விவாதிக்கும்.

நகர மேயரின் தீர்மானத்திற்கு சமூக சேவகர்களும், மதத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சரியான நடவடிக்கை என மதப் புரோகிதர் டான் போலோ சிகர் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆபாசத்தை வெளிப்படுத்தும் ஆடைகளுக்கு இத்தாலி நகரில் தடை வருகிறது"

கருத்துரையிடுக