இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு இந்தியா தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் நம் நாட்டிற்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தின் அறிகுறியாகும்.
ஐ.நா சபையின் 191 உறுப்பு நாடுகளில் 187 நாடுகள் இந்தியா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தீர்மானத்தை அங்கீகரித்துள்ளன.
ஒரு காலத்தில் அணிசேராக் கொள்கையின் அதிகாரப்பூர்வ பிரச்சாரகராக செயல்பட்ட இந்தியா பின்னர் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏறக்குறைய அக்கொள்கையை கைகழுவிவிட்ட நிலையில்தான் உள்ளது.
தேசிய சுதந்திரப் போராட்டங்களுக்கும், ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கும் அக்கறைக் காட்டும் அணிசேராக் கொள்கையிலிருந்து விலகிய இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டைக்கைக் கொண்டது. இதன் விளைவாக, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு நாடாகவே அரபு,ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகள் பார்க்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுடன் போட்டிப்போடும் நாடு என்றும், ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து அட்டூழியங்களை நிகழ்த்திவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரகசியமாகவும், பகிரங்கமாகவும் ஆதரவு தெரிவிக்கும் நாடு என்ற குற்றச்சாட்டும் இந்தியாவின் மீது விழுந்துள்ளது.
சமீபகாலமாக பிரேசில், தென்னாப்பிரிக்கா,இந்தோனேஷியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுடனான உறவை வலுப்படுத்த நடைப்பெற்ற முயற்சிகளின் காரணமாக வெள்ளை மாளிகையின் ஆதிக்கத்திலிருந்து சற்று இடைவெளியை பேண முடிந்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட 5 நாடுகளின் கட்டளைக்கு தலையாட்டும் நிலையில்தான் ஐ.நா உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானதாகும்.
இரண்டாவது உலகப்போருக்கு பின்னால் ஆதிக்கத்தை நிலைநாட்டிய நாடுகளின் விருப்பங்களைத்தான் ஐ.நா பெரும்பாலும் பாதுகாத்து வருகிறது.ஐ.நா பொதுசபையின் தீர்மானங்களுக்கு வெறும் சிபாரிசுகள் என்ற மதிப்பே உள்ளது.
ஈரான், வடகொரியா,சூடான் போன்ற நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற சிறிது காலதாமதம் கூட செய்யாத ஐ.நாவும், ஐ.நாவின் அமைப்புகளும் இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்ப தயங்கியே வருகின்றன.
உலகின் பல்வேறு நடைமுறைகளில் காலச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் ஏற்பட்டதைப் போன்று ஐ.நாவின் கட்டமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தடைக்கற்களாக மாறியுள்ளன.
இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அங்கத்துவம் வகித்து வீட்டோ அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தால்தான் ஐ.நாவினால் ஏதேனும் பயன் விளையும்.
மக்கள் தொகையிலும், நிலப்பரப்பிலும் இந்தியாவை விட பின்தங்கியுள்ள பிரிட்டன் வீட்டோ அதிகாரம் கொண்ட பெரும் சக்தியாக திகழ்வது நகைக்கதக்க ஒன்றாகும். இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.
ஐ.நாவின் புனர்நிர்மாணத்திற்கு ஆத்மார்த்தரீதியான உபதேசங்களை பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக பதவியேற்றுள்ள இந்தியா அளிக்கும் என்று எதிர்பார்ப்போம்.
அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளுக்கும், அத்துமீறல்களுக்கும் தடைபோடுவதற்கு ஐ.நாவால் இயலவேண்டும். சர்வாதிகாரத்தையும், ஆதிக்க நடவடிக்கைகளையும் தடைச் செய்யக்கூடிய அமைப்பாக ஐ.நா உருவாக புதியதாக வளர்ந்துவரும் நாடுகளின் கூட்டணி வலு சேர்க்கவேண்டும். அதற்காக, 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த இந்தியாவிற்கு இயலவேண்டும்.
அமெரிக்க தேசத்தில் அளிக்கப்பட்டுள்ள போலீஸ்காரருடைய பணியல்ல பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி என்பதை இந்தியா உணர்ந்து செயல்படும் என நம்புவோம்!
விமர்சகன்

0 கருத்துகள்: on "பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் ஓர் வாய்ப்பு"
கருத்துரையிடுக