அயோத்தியா,அக்.14:பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் முக்கிய கட்சிதாரரான நிர்மோஹி அகாரா சமரசத்திற்காக முன்வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இஸ்லாமிய மார்க்க கல்வி கலாச்சாலையான தேவ் பந்த், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஹிந்து மதத் தலைவர்களான ராம்தேவ், ஸ்ரீ ரவி சங்கர், முதாரி பாபு உள்ளிட்டவர்கள் மத்தியஸ்தராக செயல்படுவதை விரும்புவதாக நிர்மோஹி அகாரா கூறியுள்ளது. இதனை நிர்மோஹி அகாராவின் மனந்த் பாஸ்கர் தாஸின் சிறப்பு தேவைகளுக்கான பிரதிநிதி பூஜாரி ராம்தாஸ் பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சமாதானத்தின் மெழுவர்த்தியை ஏற்றியுள்ளதாகவும், அதனை பாதுகாப்பதும், பரவலாக்குவதும் அந்தந்த மதத்தவர்கள் மற்றும் நாட்டின் பொது சமூகத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
அமைதியை ஏற்படுத்துவது என்பது அனைவருடைய பொதுவான விருப்பமாகும். ஆதலால், முஸ்லிம்,ஹிந்து சமூகங்களின் உன்னத நபர்கள் கைக்கோர்த்து பாப்ரி பிரச்சனைக்கு தீர்வுக்காண வேண்டும் என பூஜாரி மேலும் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அப்துல் கலாமும், ரவிசங்கரும் மத்தியஸ்தம் வகிக்க நிர்மோஹி அகாரா கோரிக்கை"
கருத்துரையிடுக