9 அக்., 2010

தாலிபானின் பங்களிப்பில்லாமல் ஆஃப்கானில் சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை - ஐ.நாவின் முன்னாள் பிரதிநிதி

கோபன்ஹெகன்,அக்.9:தாலிபானின் பங்களிப்பில்லாமல், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை என ஆப்கானிஸ்தானிற்கான ஐ.நாக் குழுவில் இடம்பெற்றிருந்த தலைவராகயிருந்த காய் எய்தே கூறியுள்ளார்.

ராணுவ நடவடிக்கை மூலம் போரில் வெற்றிப்பெற முடியாது எனவும், அரசியல் ரீதியான தீர்வின் மூலமே பரிகாரம் காண இயலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள எய்தே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். பெரிய அளவிலான சிவிலியன்களுக்கான உதவி அளிப்பதுடன், பிரச்சனைகளை ஆப்கானிஸ்தானால் சுயமாக தீர்க்கமுடியும் என்பதை அங்கீகரிப்பதே முதலில் செய்யவேண்டிய பணியாகும்.

விவசாயம், அடிப்படை வசதிகள், கல்வி, சிவிலியன் அதிகார சட்டத்தின் நிர்மாணம் ஆகியத்துறைகள்தான் முன்னுரிமை அளிக்கவேண்டியவை. பிரச்சனையை தீர்ப்பதற்கு கால வரம்பு அளிப்பதற்கு பதிலாக பொறுமையோடு காரியங்களை செய்யவேண்டும் என எய்தே கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தாலிபானின் பங்களிப்பில்லாமல் ஆஃப்கானில் சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை - ஐ.நாவின் முன்னாள் பிரதிநிதி"

கருத்துரையிடுக