13 அக்., 2010

குடியேற்றம்:இஸ்ரேலின் வாக்குறுதியை ஃபலஸ்தீன் தலைவர்கள் நிராகரித்தனர்

ரமல்லா,அக்.13:தங்களது நாட்டை யூத நாடாக அங்கீகரித்தால் குடியேற்ற நிர்மாணப் பணிகளை நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ள இஸ்ரேலின் கூற்றை நிராகரித்தனர் ஃபலஸ்தீன் தலைவர்கள்.

இஸ்ரேலை யூத நாடாக அங்கீகரிப்பதற்கும், குடியேற்ற நிர்மாணத்திற்கும் தொடர்பில்லை என ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தர் ஸாஇப் எராகத் தெரிவித்துள்ளார்.

புதிய கோரிக்கைகளை முன்வைத்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு விளையாடுகிறார். சர்வதேச சட்டங்களை மீறித்தான் இஸ்ரேல் குடியேற்றங்களை கட்டிவருகிறது. இதனை நிறுத்திவிட்டு சமாதான நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தயாராக வேண்டும் என எராகத் கோரியுள்ளார்.

1967 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐந்து லட்சம் யூதர்கள், கிழக்கு ஜெருசலம் உட்பட்ட மேற்குகரையில் குடியேறினர். சர்வதேச சட்டத்தின்படி குடியேற்ற வீடுகளை கட்டுவது சட்டவிரோதம் என்றாலும் இஸ்ரேல் இதனை அங்கீகரிப்பதில்லை.

இஸ்ரேலில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் அரபு வம்சாவழியைச் சார்ந்தவர்களாவர். ஃபலஸ்தீன் அகதிகள் அவர்களுடைய இஸ்ரேலிலுள்ள வீடுகளுக்கு திரும்பிவர இஸ்ரேல் அனுமதியளிக்குமா? என ஃபலஸ்தீன் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எகிப்து மற்றும் ஜோர்டானுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடாத விஷயங்களைக் குறித்து ஃபலஸ்தீனுடனான பேச்சுவார்த்தையில் அவர்கள் கூறுகின்றனர்.

நெதன்யாகுவின் கூற்றிற்கு பதிலளிக்க அமெரிக்கா தயாரில்லை. ஆனால், இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணப் பணிகளை நிறுத்தவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஹாரட்ஸ் தினசரிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு குத்ஸில் சில்வானில் ஃபலஸ்தீன் இளைஞர்களை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது. ரெய்டின்போது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான குழந்தைகளுக்கு காயமேற்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குடியேற்றம்:இஸ்ரேலின் வாக்குறுதியை ஃபலஸ்தீன் தலைவர்கள் நிராகரித்தனர்"

கருத்துரையிடுக