13 அக்., 2010

அரசின் முறைகேடுகளால் மனம் வெறுத்துப்போனது - கர்நாடக ஆளுநர் பரத்வாஜ்

பெங்களூர்,அக்.13:பொருளாதார முறைகேடுகள், அரசியலில் ஊழல் ஆகியவற்றை வெளியிட்டு கர்நாடக ஆளுநர் சி.ஹெச்.பரத்வாஜ் எடியூரப்பா அரசுக்கெதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரத்வாஜ் சிபாரிசுச் செய்ததை பாரபட்சமான நடவடிக்கை என விமர்சனம் எழுந்ததைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசின் சுரங்கத் தொழில் மோசடி, அரசியல் ஆகியவற்றை ஒன்றுகூட விடாமல் கூறி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

சுரங்கத் தொழிலில் நடைப்பெற்றுவரும் முறைகேடுகளும், நில ஊழல்களும் தன்னை சோர்வடையச் செய்துள்ளதாக கூறிய ஆளுநர், மக்களுக்கு சேவை புரிவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதனை கர்நாடகாவில் செய்யவில்லை எனக் கூறுகிறார் ஆளுநர்.

அவர் மேலும் கூறியதாவது:"நான் பிறந்தது கர்நாடகா மாநிலத்தில் அல்ல. ஆனால், கர்நாடகா ஆளுநர் என்ற நிலையில் எனக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நான் தோல்வியுற்றால் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், ஆளுநர் ஆகிய நிலைகளிலுள்ள எனது முழு வாழ்க்கைக்கும் எதிரானதாக மாறிவிடும்.

ஆளுநர் என்ற நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனக்கு அவநம்பிக்கையே மிஞ்சியது. கடந்த ஆண்டு வடக்கு கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் வீடு இழந்தவர்களுக்கு இதுவரை வீடு கிடைக்கவில்லை. வெள்ளநிவாரண நிதியாக மத்திய அரசு கர்நாடகா மாநில அரசுக்கு வழங்கிய 1400 கோடி எங்கே போனது? என்னால் சட்டமன்றத்திற்கு செல்லவோ, அங்கு சென்று இவ்விஷயங்களையெல்லாம் விவாதிக்கவோ இயலாது.

கடந்த ஆண்டு கர்நாடக அரசுக்கெதிராக எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்திய ரெட்டி சகோதரர்கள், எம்.எல்.ஏக்களை கடத்திச் சென்றபொழுது, அரசு அவர்களை தகுதியிழக்கச் செய்ததா? அல்லது அங்கீகரித்ததா? ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பா அரசுக்கு எதிராக கிளம்பிய பொழுது எடியூரப்பா அழுதார். அப்பொழுது எனக்கு எடியூரப்பாவிடம் பரிதாபம் தோன்றியது. அன்று, நான் அரசுக்கெதிராக செயல்படவில்லை." இவ்வாறு ஆளுநர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரசின் முறைகேடுகளால் மனம் வெறுத்துப்போனது - கர்நாடக ஆளுநர் பரத்வாஜ்"

கருத்துரையிடுக