7 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித்:உச்சநீதிமன்றத்தில் நீதிக்கான போராட்டம் துவங்கவிருக்கிறது

புதுடெல்லி,அக்.7:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாக பங்கு வைக்குமாறு தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியான போராட்டம் துவங்கவுள்ளது.

வழக்கின் தற்போதைய மூன்று கட்சிதாரர்களும், உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக மேல்முறையீடு செய்யப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்யப்போவதாக சன்னி வக்ஃப்போர்டு அறிவித்துள்ளது. இவர்களுடன் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கட்சிதாரராக இணையப் போகிறார்கள்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 2.77 ஏக்கர் நிலம் பரிபூரணமாக முஸ்லிம்களுக்கே சொந்தம் எனவே அதனை முஸ்லிம்களுக்கு அளிக்கவேண்டும் என சன்னி வக்ஃப் போர்டு வாதத்தை எடுத்து வைக்கும்.

இவ்வழக்கின் இதர இரண்டு கட்சிதாரர்களான நிர்மோஹி அகாராவும், ஹிந்து மகாசபையும், விசுவஹிந்து பரிஷத்துடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்த(?) தீர்ப்பைக் குறித்து இவர்கள் உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவர். ஆனால் விசுவஹிந்து பரிஷத்தோ, கோயில் கட்டுவதற்கு அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தையும் அளிக்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் கோரும்.

தற்பொழுது மூன்று பிரிவினருக்கும் 3500 சதுர அடி வீதம் பங்குவைக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் கோயில் கட்ட 2.77 ஏக்கர் நிலத்துடன் அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்தையும் அளிக்கவேண்டும் என வி.ஹெச்.பி கோரும்.

1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பிறகும் 1993 ஆம் ஆண்டில்தான் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு முன்பு, இந்த நிலத்தோடு இணைந்த 43 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி ட்ரஸ்டிற்கு அளிக்கப்பட்டிருந்தது.

70 ஏக்கர் நிலத்தில் டெல்லியிலுள்ள அக்‌ஷார்த்தம் கோயில் மாதிரியில் விசாலமான கோயில் கட்ட வி.ஹெச்.பி திட்டமிட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:உச்சநீதிமன்றத்தில் நீதிக்கான போராட்டம் துவங்கவிருக்கிறது"

கருத்துரையிடுக