7 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணம் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியே: நீதிபதி எஸ்.யு.கான்

புதுடெல்லி,அக்.7:1990 களில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிதான் டிசம்பர் 6ஆம் தேதி பாப்ரி மஸ்ஜிதை தகர்ப்பதற்கான சூழலை உருவாக்கியதாக பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சில் தீர்ப்புக்கூறிய 3 நீதிபதிகளில் ஒருவரான ஸிபகத்துல்லாஹ் கான் தெரிவித்துள்ளார்.

இவர் தனது 285 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்த உண்மைகளுக்கு புறம்பான வினோதமான கண்டுபிடிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல,பாப்ரி மஸ்ஜிதை தகர்க்க சங்க்பரிவார் நடத்திய பிரச்சாரங்களையும், சதித் திட்டங்களையும் காணாததுபோல் நடிக்கிறார் எஸ்.யு.கான்.

சங்க்பரிவார் பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததற்கு 3 காரணங்களாம். இது எஸ்.யு.கானின் கண்டுபிடிப்பு.
1.அப்பொழுது இந்தியாவின் பொருளாதார நிலை வீழ்ச்சியில் இருந்தது.
2.ரூபாயின் மதிப்பு இரண்டு முறை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தது.
3.ஒ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) பிரிவைச் சார்ந்தவர்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை பரிந்துரைச் செய்யும் மண்டல் கமிஷன் அறிக்கை பாப்ரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

வழிதெரியாமல் திணறிய இந்தியாவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம் என எஸ்.யு.கான் சுட்டிக்காட்டுகிறார்.

தேசத்தின் அழிவுக்கு வித்திட்டவர்களோடு மாறுபட்டு இந்திய மக்கள் பாராட்டப்பட வேண்டிய விதத்தில் விரைவாக பழைய நிலைக்கு திரும்பினர். இதற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியே காரணம்.

மேலும் கான் கூறுகிறார். "கார்ல் மாக்ஸின் கருத்துக்களை நான் முற்றிலும் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதேவேளையில், வரலாற்றை பொருளாதார கொள்கையோடு சேர்ந்து மட்டுமே விளக்கமளிக்க இயலும் என்ற கார்ல் மாக்ஸின் கருத்தை நான் ஓரளவு ஒத்துக்கொள்கிறேன். இனியொரு வீழ்ச்சி ஏற்பட்டால் நம்மால் விரைவாக மீண்டுவரமுடியாது. உலகம் 1992 ஆம் ஆண்டைவிட வேகமாக அடியெடுத்து வைக்கிறது."

நபி(ஸல்...) அவர்கள் எதிரிகளுடன் மேற்கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை பற்றியும் கான் குறிப்பிடுகிறார். வெளிப்படையாக இது முற்றிலும் கீழ்படிந்த நிலையாகும். ஆனால், சிறிது காலத்திற்கு பிறகு ஒரு துளி ரத்தம் சிந்தாமல் நபி(ஸல்...)அவர்கள் மக்காவை கைப்பற்றினார்கள் எனக்கூறும் கான், ஆத்மார்த்த ரீதியான அர்ப்பணிப்பு ராமனின் சிறந்த குணம் என்றும் குறிப்பிடுகிறார்.

கரசேவகர்களின் அடக்கமுடியாத உணர்வுதான் பாப்ரி மஸ்ஜிதை தகர்ப்பதற்கு தூண்டியது. இது தேசத்தை இன்னொரு பிரிவினையின் எல்லைக்கு கொண்டு சென்றது. மதரீதியான நிம்மதியற்ற சூழலுக்கும், கலவரங்களுக்கு இது வழிகோலியது என்றும் கான் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணம் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியே: நீதிபதி எஸ்.யு.கான்"

கருத்துரையிடுக