அபுதாபி,அக்.9:ப்ளாக்பெர்ரி மொபைல் ஃபோன்களை தடைச்செய்யும் முடிவை வாபஸ் பெறுவதாக யு.ஏ.இ அறிவித்துள்ளது.
ப்ளாக் பெர்ரியின் தயாரிப்பாளரான RIM ரிசர்ச் இன் மோசனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நிறுவனம் யு.ஏ.இயின் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு மொபைல் தயாரிப்பில் மாற்றம் கொண்டுவருவதாக அளித்த உறுதியின் அடிப்படையில்தான் இந்த தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனை யு.ஏ.இயின் டெலிகம்யூனிகேசன் ரெகுலேட்டரி அதாரிட்டி தெரிவித்துள்ளது. வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ப்ளாக்பெர்ரியின் எல்லா சேவைகளும் நிறுத்தப்படும் என முன்பு யு.ஏ.இ அறிவித்திருந்தது.
ப்ளாக்பெர்ரியின் மூலமான கருத்துப் பரிமாற்றம் ரகசியமானதாகவும், அவற்றை பாதுகாக்கும் சர்வர்கள் வெளிநாடுகளிலும் இருப்பதால் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனையினால்தான் ப்ளாக்பெர்ரியை தடைச்செய்ய யு.ஏ.இ அரசு தீர்மானித்தது.
ஏற்கனவே இந்தியாவும், சவூதிஅரேபியாவும் ப்ளாக் பெர்ரியை தடைச் செய்யப்போவதாக அச்சுறுத்தியிருந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ப்ளாக் பெர்ரியை தடைச்செய்யும் முடிவை வாபஸ் பெற்றது யு.ஏ.இ"
கருத்துரையிடுக