28 அக்., 2010

ஆப்கானில் நேட்டோவின் வெற்றி இயலாத ஒன்று: முன்னாள் சோவியத் அதிபர் கார்பச்சேவ்

மாஸ்கோ,அக்.28:ஆப்கானிஸ்தானில் நேட்டோ தலைமையிலான படை வெற்றிப் பெறுவது இயலாத ஒன்று என்றும், இன்னொரு வியட்நாமை தடுக்க நினைத்தால் ராணுவத்தை உடனடியாக
வாபஸ்பெற வேண்டும் எனவும் முன்னாள் சோவியத் அதிபர் மிக்காயில் கார்பச்சேவ் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னால் சோவியத் யூனியன் ஆப்கானில் தோல்வியுற்று திரும்பிய வேளையில் ரஷ்யாவின் அதிபராக இருந்தவர் கார்பச்சேவ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 வருட போருக்கு பிறகு ரஷ்ய ராணுவம் தோல்வியுற்று சொந்த நாட்டிற்கு திரும்பியது. அடுத்த வருடத்தில் ராணுவம் வாபஸ் பெறத்துவங்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்தினை வரவேற்றுள்ளார் கார்பச்சேவ்.

ஆனால், சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா சிரமப்படுகிறது என கார்பச்சேவ் தெரிவித்தார். பி.பி.சி க்கு அளித்த பேட்டியில்தான் கார்பச்சேவ் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிலிருந்து நாங்கள் வாபஸ் பெறுவதற்கு முன்பு ஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்தோம். ஆப்கான் அண்டை நாடுகளுடனும், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுடன் சமமான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக நாடாக திகழும்
என்ற ஒப்பந்தம் அமெரிக்கா பேணும் என கருதியிருந்தோம். இந்த ஒப்பந்தத்தை பேணுகிறோம் எனக் கூறிக்கொண்டே அமெரிக்கா போராளிகளுக்கு பயிற்சி அளித்தது. அதே போராளிகள்தான் இன்று ஆப்கானிற்கும், பாகிஸ்தானிற்கும் அச்சுறுத்தலாக திகழ்கின்றனர்.

ஆப்கானிஸ்தானை சொந்தக் காலில் நிற்பதற்கு உதவுவதே நேட்டோ செய்யவேண்டிய நல்லபணி என கார்பச்சேவ் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானில் நேட்டோவின் வெற்றி இயலாத ஒன்று: முன்னாள் சோவியத் அதிபர் கார்பச்சேவ்"

கருத்துரையிடுக