28 அக்., 2010

நந்திகிராம்:இழப்பீடு வழங்காததற்கு மேற்குவங்க அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லிஅக்,28:நந்திகிராமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க தாமதித்த மேற்கு வங்க அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க மாநில அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதை மட்டுமே கல்கத்தா உயர்நீதிமன்றம் தடைச்செய்துள்ளது என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டோருக்கும் அரசு இதே ரீதியிலான நடவடிக்கையை மேற்கொண்டதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதேவேளையில், துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை தடைச்செய்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள மனுமீது உச்சநீதிமன்றம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி பரிசீலிக்கும்.

கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி நடந்த நந்திகிராம் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் வீதமும், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் வீதமும் நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நந்திகிராம்:இழப்பீடு வழங்காததற்கு மேற்குவங்க அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்"

கருத்துரையிடுக