28 அக்., 2010

அருந்ததிராய்க்கும், கிலானிக்குமெதிராக வழக்குப் பதிவுச்செய்ய வாய்ப்பில்லை

புதுடெல்லி,அக்.28:கஷ்மீருக்கு சுதந்திரம் தேவை என டெல்லி கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவுச் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தெரிகிறது.

இருவர் மீது வழக்குப்பதிவுச் செய்தால் அது மீண்டும் கஷ்மீரில் மோதலை உருவாக்கும் என மத்திய அரசு அஞ்சுகிறது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள நடுவர்குழு கஷ்மீருக்கு சென்றுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகைத் தருகிறார். இவ்வேளையில் இருவரையும் கைதுச் செய்வது கஷ்மீரில் மீண்டும் வன்முறைக்கு வித்திடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டுமென்பது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நிலைப்பாடாகும்.

அருந்ததிராய்க்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டால் அது சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கருதுகிறது. ஆனால், பா.ஜ.கவின் நிர்பந்தத்தால் ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்துறை அமைச்சகம் உள்ளது.

வெளிநாட்டு சுற்றுப் பயணத்திலிருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு வந்தவுடன் இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதேவேளையில் இருவரையும் கைதுச் செய்வதுத் தொடர்பாக உள்துறை அமைச்சகமோ, டெல்லி போலீஸோ தங்களிடம் சட்ட ஆலோசனை கோரவில்லை என சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பிரச்சனையை ஆறப்போடவே விருப்பம். இருவரின் உரை தேசத்துரோகமானது என்பது டெல்லி போலீஸ் சட்டப்பிரிவின் நிலைப்பாடு. ஆனால், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என மத்திய் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அருந்ததி ராய்க்கெதிராக நடவடிக்கை எடுத்தால் அது மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மத்திய அரசுக்குமிடையே போராட்டத்திற்கு வழி வகுக்கும். கஷ்மீரில் பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்ற செய்யத் அலிஷா கிலானியின் மீது நடவடிக்கை எடுத்தால் அது கஷ்மீரில் மீண்டும் போராட்டத்தை துவங்க வழி வகுக்கும். அது மட்டுமல்ல, கிலானி மிகவும் மிருதுவான தன்மையிலான உரையைத்தான் டெல்லி கருத்தரங்கில் நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அருந்ததிராய்க்கும், கிலானிக்குமெதிராக வழக்குப் பதிவுச்செய்ய வாய்ப்பில்லை"

கருத்துரையிடுக