புதுடெல்லி,அக்,31:சித்திரவதைப் போன்ற கொடூரமான குற்றங்கள் புரிந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தகைய வழக்குகளில் ஜாமீன் வழங்குவதற்கு முன் அவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கும், தப்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்பதுக் குறித்து ஆராயவேண்டும் என நீதிபதிகளான டி.கெ.ஜெயின், ஹெச்.எல்.தத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறியுள்ளது.
57 வயதான விதவைப் பெண்மணி ஒருவரை மூச்சுத் திணறச்செய்துக் கொலைச்செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம் குற்றவாளியின் ஜாமீனை ரத்துச்செய்து கைதுச் செய்ய உத்தரவிட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி இவ்வழக்குத் தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. மல்லிகா சென் என்ற பெண்மணிதான் கொல்லப்பட்டார். குற்றவாளியின் ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் 3 தடவை தள்ளுபடிச் செய்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சித்திரவதை:ஜாமீன் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் - உச்சநீதிமன்றம்"
கருத்துரையிடுக