31 அக்., 2010

துபாய்:அமெரிக்க சரக்கு விமானத்தில் வெடிப்பொருள்

துபாய்,அக்:யெமனிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் சரக்கு விமானத்தில் வெடிப்பொருட்களை கண்டெடுத்ததாக துபாய் போலீஸ் அறிவித்துள்ளது.
பெண்டோ எரித்ரிநால் ட்ரை நைட்ரேட் அடங்கிய பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு டெட்ராய்ட் சென்ற விமானத்தில் குண்டுவெடிப்பு முயற்சியில் இதே இராசயனப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டன், துபாய் பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்காவிற்கான சரக்கு விமானத்தில் யெமனிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு பேக்கேஜ்களை தடுத்து வைத்தனர். தொடர்ந்து நடத்திய சோதனையில் துபாய் பேக்கேஜில் வெடிப்பொருள் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.

யெமனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்காயிதாவுக்கு இத்துடன் தொடர்பிருக்கலாம் என புலனாய்வு ஏஜன்சிகள் கருதுகின்றன. சிக்காக்கோவில் யூத தேவாலயங்களின் முகவரியில் இரண்டு பேக்கேஜ்களும் அனுப்பப்பட்டுள்ளன. இது இச்சம்பவத்தில் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

யு.பி.எஸ், ஃபெட்எக்ஸ் சரக்கு விமானங்களில்தான் பாக்கேஜ்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், மேற்காசியா ஆகிய இடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யெமனிலிருந்து வந்த இதர விமானங்களும் அமெரிக்க விமானநிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிப்பொருளா என்பதுக் குறித்து சோதனை நடந்துவருவதாக பிரிட்டீஷ் உள்துறை செயலாளர் தெரஸா மே தெரிவித்துள்ளார்.

தாக்குதல் முயற்சி முற்றிலும் முறியடிக்கப்பட்டதாக கருதவில்லை எனவும் எச்சரிக்கை தொடரும் எனவும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தீவிரவாத எதிர்ப்பு ஆலோசகர் ஜான் ப்ரண்ணன் தெரிவித்துள்ளார்.

யெமனின் தலைநகரான சன்ஆவிலும் சோதனை துவங்கியுள்ளது. பாக்கேஜ்கள் யெமனிலிருந்து அனுப்பப்பட்டதாகவும் மேலும் விசாரணை நடந்துவருவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாதான் புதிய அச்சுறுத்தல் குறித்து தகவல் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. யெமனிலிருந்து அனைத்து சேவைகளையும் ரத்துச் செய்துள்ளதாக ஃபெட்எக்ஸும், யு.பி.எஸ்ஸும் அறிவித்துள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துபாய்:அமெரிக்க சரக்கு விமானத்தில் வெடிப்பொருள்"

கருத்துரையிடுக