13 அக்., 2010

முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய ஏற்படும் தாமதம் ஆதாரங்களை நிராகரிக்க காரணமாகாது - உச்சநீதிமன்றம்

புதுடெல்லி,அக்.13:முதல் தகவல் அறிக்கையை (F.I.R) பதிவுச் செய்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் சாட்சியங்களின் பொருத்தமின்மை ஆகிய அரசுத் தரப்பு ஆதாரங்களை நிராகரிக்க காரணங்களாக் அமையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிராம பிரதேசங்களில் காவல் நிலையங்கள் தொலைவில் இருக்கும். மேலும், காலதாமதம் ஏற்படும் பொழுது ஞாபகசக்தியில் குறைபாடும் ஏற்படும். இவற்றை சுட்டிக் காட்டித்தான் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை கூறியுள்ளது.

1978 ஆம் ஆண்டில் சிவ்விலாஸ் என்பவர் சுடப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கிய ராம்நரேஷ் என்பவரின் மேல்முறையீட்டில் இத்தீர்ப்பை கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.

துப்பாக்கி குண்டடிப்பட்ட மறுதினம்தான் சிவ்விலாஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்தார் எனவும், சாட்சிகளான ராம்விலாஸ் மற்றும் லாலுவின் சாட்சி மொழிகளில் வேறுபாடுகளிருப்பதாகவும் கூறித்தான் ராம்நரேஷ் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.

1978 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் 1986 ஆம் ஆண்டில்தான் ஆதாரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த கால அளவில் ஞாபக சக்தியில் குறைவு ஏற்படலாம். என நீதிபதிகளான ஹெச்.எஸ்.பேடி, சி.கெ.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.

சிவ்விலாஸின் வீடு காவல் நிலையத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. துப்பாக்கியால் அவர் சுடப்பட்டது மாலை வேளையில். ஆகையினால், மறுதினமே முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்ய முடிந்துள்ளது என்பதையும் உச்சநீதிமன்றம் கண்டறிந்தது.
செய்தி;தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய ஏற்படும் தாமதம் ஆதாரங்களை நிராகரிக்க காரணமாகாது - உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக