25 அக்., 2010

உச்சநீதிமன்றம் தலையிட்டிருந்தால் பாப்ரி மஸ்ஜித்

புதுடெல்லி,அக்.25:உச்சநீதிமன்றம் முறையாக தலையிட்டிருந்தால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டிருக்காது என முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான எ.எம்.அஹ்மதி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டியூட் ஆஃப் அப்ஜக்டிவ் ஸ்டடீஸ் பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பைக் குறித்து நடத்திய கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அஹ்மதி. மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் நிலத்தின் ரிசீவராக மத்திய அரசை நியமித்து உத்தரவிட வேண்டும் என அன்று அட்டர்னி ஜெனரலாக இருந்த மிலன் பானர்ஜி, நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, நீதிபதி ஜி.என்.ரே அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சின் முன்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

மஸ்ஜித் தகர்க்கப்படும் என்பதுக் குறித்து உறுதியான தகவல் கிடைத்ததாகவும் மிலன் பானர்ஜி உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார். ஆனால், இத்தகையதொரு தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக, பஜனைகள் பாடுவது உள்ளிட்ட கரசேவைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தகையதொரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காமலிருந்திருந்தால் பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டிருக்காது.

பாப்ரி மஸ்ஜிதை தகர்ப்பதற்கு உதவிய உத்திரபிரதேச மாநில முதல்வர் கல்யாண்சிங்கிற்கு ஒரு நாள் சிறை வழங்கியதும் தவறாகும்.

பாப்ரி மஸ்ஜிதுக்கு அடியில் கோயில் இருந்ததா? என்பதுக் குறித்து ஆராய, அகழ்வாராய்ச்சி நடத்துவதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை. (பாப்ரி வழக்கை அன்று பரிசீலித்த உச்சநீதிமன்ற 5 உறுப்பினர்களைக் கொண்ட பெஞ்சின் உறுப்பினராகயிருந்தவர் அஹ்மதி என்பது குறிப்பிடத்தக்கது).

அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை, நீதிமன்ற தீர்ப்பு என்று அழைக்கக்கூட முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும். இவ்வாறு அஹ்மதி உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உச்சநீதிமன்றம் தலையிட்டிருந்தால் பாப்ரி மஸ்ஜித்"

கருத்துரையிடுக