25 அக்., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு பயங்கரவாதி இந்திரேஷ்குமாருடன் பாப்ரி மஸ்ஜித் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சில முஸ்லிம் தலைவர்களின் துரோகம்

புதுடெல்லி,அக்.25:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் இந்திரேஷ் குமாருடன் பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக சில முஸ்லிம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் தலைவர் மஹ்மூத் மதனி, ஆல் இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் செயற்குழு உறுப்பினர்களான கமால் ஃபாரூக்கி, காலித் ராஷித் ஆகியோர்தான் அஜ்மீர், மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை கொன்றொழிக்க காரணமாகயிருந்தவர் என ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திரேஷ்குமார் என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு அளித்த பிறகு இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுவாமி அக்னிவேஷ் என்பவர்தான் இப்பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தர். பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும், அதன் தொடர் நடவடிக்கைகளையும் குறித்து ஆலோசனைச் செய்வதற்காக கடந்த 16 ஆம் தேதி லக்னோவில் கூடிய ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரியக் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு விரோதமான முறையில் இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இஸ்லாமிக் கலாச்சார மையத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த துரோக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முஸ்லிம் பெயர் தாங்கித் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவான நிலைப்பாட்டை கைக்கொண்டதாக சாட்சிகள் கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்திரேஷ்குமாரின் நிலைப்பாடு. இதனை எதிர்க்க முஸ்லிம் பெயர்தாங்கித் தலைவர்கள் முயற்சிக்கவில்லை.

குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்திரேஷ்குமாரின் பெயர் ஊடகங்களில் ஏற்கனவே வெளிவந்திருந்தன. ஆனாலும், மஹ்மூத் மதனி உள்ளிட்ட சமுதாயத்தில் பெருமதிப்புடன் திகழும் தலைவர்கள் இந்திரேஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இப்பேச்சுவார்த்தை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகத்தான் லக்னோவில் கூடிய முஸ்லிம் தனியார் சட்டவாரிய கூட்டத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன் வழக்கில் உதவிபுரிய சட்டப்பிரிவு
ஒன்றையும் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது.

மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளுக்கு வாரியம் தயார் என்று அறிவித்த பொழுதிலும், எவரிடமும் அதுக்குறித்த பொறுப்பு ஒப்படைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, இத்தகைய பேச்சுவார்த்தைகள் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நடத்துவதற்கு எதிர்ப்பும் இருந்தது.

கடந்த 16 ஆம் தேதி நடைப்பெற்ற முஸ்லிம் தனியார் சட்டவாரிய கூட்டத்திலேயே சில முஸ்லிம் தலைவர்கள் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் நிலைப்பாட்டிற்கு விரோதமான நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முயற்சித்தனர்.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை பரிபூரணமாக ஹிந்துக்களுக்கு தாரைவார்க்க வேண்டும் என கேரள மாநிலத்திலிருந்து சென்ற ஒரு ஸலஃபி தலைவர் கருத்துத் தெரிவித்தார்.

ஒரு ஷியா தலைவரும் இதற்கு அனுகூலமான கருத்தைத் தெரிவித்தார். ஆனால், பெரும்பாலான தலைவர்கள் இக்கருத்தினை எதிர்த்தனர்.

செய்தி:தேஜஸ்௦ மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு பயங்கரவாதி இந்திரேஷ்குமாருடன் பாப்ரி மஸ்ஜித் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சில முஸ்லிம் தலைவர்களின் துரோகம்"

கருத்துரையிடுக