வாஷிங்டன்,அக்.5: 9/௦௦11 தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையம் நிலைக்கொண்ட க்ரவுண்ட் ஜீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இமாம் ஃபைசல் அப்துல் ரெளஃப், அவருடைய மனைவி டெய்சிகான் ரெளஃப் ஆகியோருக்கு அன்றாடம் தொலைபேசிகளிலும் இணையதளம் வழியாகவும் கொலை மிரட்டல்கள் குவிந்துகொண்டேயிருக்கின்றன.
தாக்குதலுக்குள்ளான கட்டடங்களுக்கு அருகிலேயே இஸ்லாமிய மையத்தையும் மசூதியையும் கட்ட ஏற்பாட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர். ஆனால் எதிர்ப்பாளர்களோ மசூதியே கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்கும் வகையில் பெரிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது.
பல அடுக்கு மாடி கட்டடமாக உருவெடுக்கவுள்ள இதன் ஒரு தளத்தில் இஸ்லாமிய மையமும் மற்றொன்றில் தொழுகை செய்யும் வசதிகளோடு மிகப்பெரிய மசூதியும் கட்டப்படும் என்று கான் தெரிவிக்கிறார்.
இந்த கட்டடத்தில் உடல் பயிற்சி மையம், நீச்சல் குளம், குழந்தைகளைப் பராமரிக்கும் பிரிவு, சமையல் பள்ளி, கலை அரங்கம் ஆகியவையும் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துகள்: on "க்ரவுண்ட் ஜீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளவருக்கு கொலை மிரட்டல்"
ஃபைசல் அப்துர்ரவூஃப் மற்றும் டெய்சிகான்(இவர் ஒரு இண்டீரியர் டிசைனர். ஹிஜாப் அணிவது இவர்களது வழக்கமாக இல்லை. ஃபைசல் அப்துர்ரவூஃபோ முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு இவரை திருமணம் செய்துகொண்டார் - இது வேர விசயம்) இருவரும் அமெரிக்க அரசின் கையாட்கள் என்பதை மறைக்கவே இது மாதிரி கதைகளை அவிழ்த்து விடுவது வழக்கம். அந்த மஸ்ஜிது கிரவுண்ட் ஜீரோ மஸ்ஜிதும் இல்லை. அது கிரவுண்ட் ஜீரோவில் இருந்து இரண்டு பிளாக் (200-300மீட்டர்)தொலைவில் அமைய இருக்கின்றது. சரி. இருக்கட்டும். யார், இந்த செண்டருக்கு கிரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் என்று பெயர் வைத்தது? இதற்கு அவ்வளவு பணத்தை அள்ளி வழ்ங்கியது யார்? இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் எனக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. மேற்கொண்டு இவர்கள் மற்றும் இவர்களது அமைப்புகள் நடத்து கொள்ளும் விதம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. ASMA (American Society for Muslim Advancement http://www.asmasociety.org/home/) அமைப்பைப் பார்ப்பதற்கு நல்ல வேலை செய்வது போல் தெரிந்தாலும் முஸ்லிம் இளைஞர்களை so called Modern Muslim களாக மாற்றுவதற்கு தேவையான வேலைகளை மட்டும் செய்வது புலப்படுகிறது. ஜூலை 2006ல் டென்மார்க்கில் "நாளைய முஸ்லிம் தலைவர்கள்" என்ற பெயரில் நடத்தி அதில் 15நாடுகளிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை கொண்டுவந்து ரஸூல் (ஸல்) அவர்களை கேலிசித்திரங்களாக வரைந்த 'ஜில்லாந்ஸ்-போஸ்டன்' என்ற பத்திரிககையின் ஆசிரியரை முக்கிய உரை நடத்தியது இவரது அமைப்பு. இது மட்டும் அல்ல. பார்க்51 ( கிரவுண்ட் ஜீரோ மஸ்ஜிது) பற்றிய சர்ச்சை கடந்த மாதம் அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற சமயம், அது பற்றி கவலை கொள்ளாமல் (யு.எஸ். கவனித்துக்கொள்ளும்) யு.எஸின் செலவில் அரபு நாடுகளில் அமெரிக்கா பற்றிய நல்லெண்ணத்தை? உருவாக்க யு.எ.யி., கத்தார், போன்ற அரபு நாடுகளில் சுற்றிவந்தார்.
கருத்துரையிடுக