26 அக்., 2010

விக்கிலீக்ஸ் நிறுவனரை கைதுச் செய்ய அமெரிக்கா நெருக்கடி

நியூயார்க்,அக்.26:ஈராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியா அஸன்ஜா௦௦௦௦ அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, இவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

எனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், ஆள்மாறாட்டத்தில் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். பெர்லின், லண்டன் என அடிக்கடி நாடு மாறும் இவர், வெவ்வேறு பெயர்களில் ஹோட்டல்களில் தங்குகிறார். தனது இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதற்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் நண்பர்களிடம் கடனுதவிப் பெற்று பணமாக மட்டுமே செலவழிக்கிறார்.

இதனிடையே, சுவீடன் நாட்டில் தங்கியிருந்தபோது இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கை மறுவிசாரணை செய்ய அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அஸன்ஜா௦௦௦௦, அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக தன்னைக் குறித்து அவதூறு பிரசாரம் பரப்பப்படுவதாக கூறினார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ் நிறுவனரை கைதுச் செய்ய அமெரிக்கா நெருக்கடி"

கருத்துரையிடுக