லண்டன்,அக்.30:பொது நலனுக்காக செயல்படும் பிரிட்டனின் வழக்கறிஞர் அமைப்பு ஒன்று ஈராக்கில் பிரிட்டன் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தவர்களை கொடூரமாக சித்திரவதைச் சம்பவங்களை பரிசோதனை நடத்தவிருக்கிறார்கள்.
ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ராணுவத்தினர் நடத்திய அட்டூழியங்களை கடந்த வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் மீண்டும் பகிரங்கப்படுத்தப்பட்டது.
இச்சூழலில்தான், பிரிட்டன் ராணுவத்தினர் நடத்திய கொடூரங்களைக் குறித்து அந்நாட்டின் வழக்கறிஞர் அமைப்பான பப்ளிக் இண்டரஸ்ட் லாயர்ஸிற்கு பரிசோதனை நடத்த தூண்டியதாக டெய்லி மார்னிங் ஸ்டார் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களின்படி சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்யக்கூடாது. மேலும், இன்னொரு நாட்டிடம் கைதிகளை ஒப்படைக்கும் பொழுது, அந்நாட்டில் சிறைக்கைதிகள் சித்திரவதைச் செய்யப்பட வாய்ப்பிருந்தால், சிறைக்கைதிகளை ஒப்படைக்கக் கூடாது என சட்டம் கூறுகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு பிரிட்டீஷ் ராணுவம் சிறைக்கைதிகளை ஈராக் அதிகாரிகளிடமும், அமெரிக்க ராணுவத்தினரிடமும் ஒப்படைத்ததுக் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என வழக்கறிஞர் அமைப்பு பிரிட்டீஷ் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டீஷ் ராணுவத்தினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட ஈராக் சிறைக்கைதிகள் சிலருக்காக பாடுபடும் அமைப்புதான் பப்ளிக் இண்டரஸ்ட் லாயர்ஸ் என்ற வழக்கறிஞர்கள் அமைப்பு.
சிறைக்கைதிகளை விடுதலைச் செய்தபிறகு அவர்களின் முழு விபரங்களையும் பிரிட்டீஷ் ராணுவம் ஈராக் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், தொடர்ந்து இவர்களை மீண்டும் ஈராக் ராணுவம் கைதுச் செய்து சித்திரவதைச் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைக் குறித்தும் விசாரணைச் செய்யப்படும் என வழக்கறிஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்:சித்திரவதைகள் குறித்து பிரிட்டன் வழக்கறிஞர்கள் அமைப்பு விசாரணை"
கருத்துரையிடுக