30 அக்., 2010

ஹரீரி கொலை:விசாரணையை புறக்கணிக்க ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

பெய்ரூத்,அக்.30:லெபனான் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலை வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐ.நாவின் தீர்ப்பாயத்தை புறக்கணிக்க ஹிஸ்புல்லாஹ் லெபனான் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா தீர்ப்பாய விசாரணை அதிகாரிகள் இஸ்ரேலிற்காக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஐ.நா தீர்ப்பாயத்தை புறக்கணிக்க லெபனான் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணை என்ற பெயரில் இஸ்ரேலுக்கு தகவல்கள் பரிமாறப்படுகின்றன. விசாரணைக்கு ஒத்துழைப்பது ஹிஸ்புல்லாஹ்வின் மீது தாக்குதல் நடத்த உதவிகரமாக இருக்கும்.

இரண்டு தினங்களுக்கு முன்பு விசாரணை குழுவைச் சார்ந்தவர்களை ஒரு பெண்கள் குழு தாக்கியிருந்தது. அதேவேளையில், ஈரான் மற்றும் சிரியாவின் ஆதரவுடன் லெபனானின் இறையாண்மையையும், ஸ்திரத்தன்மையையும் ஆபத்தில் ஆட்படுத்த ஹிஸ்புல்லாஹ் முனைவதாக ஐ.நாவின் அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதங்களை வழங்குவது சிரியாவாகும் என ரைஸ் குற்றஞ்சாட்டியதற்கு சிரியா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்ரூத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ரஃபீக் ஹரீரி உள்பட 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தைக் குறித்து விசாரிக்க ஐ.நா சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றை நியமித்திருந்தது. இக்கொலைகளுக்கு பின்னால் சிரியா என லெபனான் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் இதனை சிரியா மறுத்து வந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹரீரி கொலை:விசாரணையை புறக்கணிக்க ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்"

கருத்துரையிடுக