16 அக்., 2010

கஷ்மீர்:போராட்டத்தை வலுப்படுத்துவோம் - கிலானி

ஸ்ரீநகர்,அக்.16:கஷ்மீரில் போராட்டத்தை வலுப்படுத்தப் போவதாக ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது; "45 தினங்கள் கழிந்த பிறகும் அரசு நான் முன்வைத்த 5 அம்ச திட்டத்தைக் குறித்து பதில் கூறவில்லை. இது கஷ்மீர் பள்ளத்தாக்கில் சாதாரண சூழலை புனரமைக்க அரசு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

எனது அபிப்ராயங்களுக்கு அரசு பதில் அளிக்கும் வரை காத்திருக்க முடியாது. ஆத்மார்த்த ரீதியாகவும், நல்லெண்ணத்துடன்தான் ஐந்து அம்ச திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், கஷ்மீர் விவகாரத்தை ஒத்திவைப்பது கூடுதல் உயிர்கள் அபகரிக்கப்படுவதற்கே உதவும்.

அக்டோபர்-நவம்பர் மாதங்கள் கஷ்மீருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களாகும். அக்டோபரின் கறுப்பு தினமான 27 ஆம் தேதிதான் இந்திய ராணுவம் கஷ்மீருக்கு வந்தது." இவ்வாறு கிலானி தெரிவித்தார்.

இதற்கிடையே ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாசீன் மாலிக்கையும் அவருடைய 5 நண்பர்களையும் பந்திப்புராவில் போலீஸ் கைதுச் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:போராட்டத்தை வலுப்படுத்துவோம் - கிலானி"

கருத்துரையிடுக